9.6 C
Cañada
March 13, 2025
உலகம்

அமெரிக்க உள்நாட்டு வருவாய் சேவையில் 6,700 ஊழியர்கள் பணிநீக்கம்!

அமெரிக்க ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் வியாழனன்று (20)உள்நாட்டு வருவாய் சேவையில் சுமார் 6,700 ஊழியர்களை பணிநீக்கம் செய்யத் தொடங்கியது.

வங்கி கட்டுப்பாட்டாளர்கள், வன ஊழியர்கள், ராக்கெட் விஞ்ஞானிகள் மற்றும் பல்லாயிரக்கணக்கான பிற அரசாங்க ஊழியர்களை குறிவைத்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பெருமளவிலான ஆட்குறைப்பு முயற்சியின் ஒரு பகுதியே இந்த பணிநீக்கம் ஆகும்.

ட்ரம்பின் மிகப்பெரிய பிரச்சார நன்கொடையாளரான தொழில்நுட்ப பில்லியனர் எலோன் மஸ்க் இந்த முயற்சியை வழிநடத்துகிறார்.

அமெரிக்காவின் உள்நாட்டு வருவாய் சேவையில் நாடு முழுவதும் சுமார் 100,000 கணக்காளர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் இதர பணியாளர்கள் பணிபுரிகின்றனர்.

முன்னாள் ஜனாதிபதி பைடன் நிர்வாகம் $80 பில்லியன் முதலீட்டில் அமலாக்கத்தை மேம்படுத்தி ஏஜென்சியை நவீனமயமாக்கும் பணியில் ஈடுபட்டது.

ஆனால், ஜனாதிபதி ட்ரம்ப் அதன் அதிகாரங்களை கட்டுப்படுத்த விரும்புகிறார்

உள்நாட்டு வருவாய் சேவை செய்தி தொடர்பாளர் பணிநீக்கங்களுக்கான சரியான எண்ணிக்கையை வழங்க மறுத்துவிட்டது.

எனினும், இந்த விடயத்தை நன்கு அறிந்தவர்களின் கூற்றுப்படி, பணிநீக்கங்கள் மொத்தம் 6,700 ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி பைடனின் கீழ் விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக பணியமர்த்தப்பட்ட ஏஜென்சியில் பணிபுரியும் தொழிலாளர்களை இலக்காகக் கொண்டுள்ளது.

2021 இல் பைடன் பதவியேற்பதற்கு முன்பு இருந்த 80,000 பேருடன் ஒப்பிடும்போது, ​​வரி ஏஜென்சி இப்போது தோராயமாக 100,000 பேரை கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

Related posts

மியான்மாரில் பொதுத்தேர்தலுக்கான அறிவிப்பு – முடிவுக்கு வரும் இராணுவ ஆட்சி

admin

அமெரிக்கா – இஸ்ரேல் உறவில் விரிசல்?

admin

போர் நிறுத்தம் அமலுக்கு வருமா? போர் மீண்டும் தொடருமா?

admin

Leave a Comment