5.2 C
Cañada
March 14, 2025
இலங்கை

குற்றச்செயல்கள் தொடர்பான தகவல்களை வழங்க பொதுமக்களுக்குத் துரித தொலைபேசி இலக்கம்

ஆயுதங்கள் மற்றும் குற்றச்செயல்கள் தொடர்பான தகவல்களை வழங்குவதற்காகப் பொதுமக்களுக்குத் துரித தொலைபேசி இலக்கமொன்றை பொலிஸார் அறிமுகப்படுத்தியுள்ளனர்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் வைத்தே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, 1997 என்ற துரித இலக்கத்துக்கு அழைப்பை எற்படுத்தி அவ்வாறான தகவல்களை அறிவிக்க முடியும் எனப் பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பொலிஸாரால் முன்னெடுக்கப்படும் குற்றவியல் விசாரணைகளைத் தடுப்பதற்கும் ஸ்திரமற்ற நிலையை ஏற்படுத்துவதற்குமான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறானவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

தமிழரசுக் கட்சி அடுத்த தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக அறிவிப்பு

admin

மிகப்பெரிய மீன்பிடிக் கப்பலைத் தயாரித்த இலங்கை

admin

முடிவுக்கு வந்த வைத்தியர்களின் போராட்டம்

admin

Leave a Comment