7.4 C
Cañada
March 14, 2025
சினிமா

ரவி மோகனை தொடர்ந்து தனது பெயரை மாற்றியுள்ள பிரபல நடிகர் கௌதம் கார்த்திக்

தமிழ் சினிமாவில் கடந்த வருடம் நிறைய பிரபலங்கள் வாழ்க்கையில் மாற்றங்கள் நடந்தது. அதில் நடிகர் ஜெயம் ரவி இல்லை இல்லை ரவி மோகன் வாழ்க்கையே மாறியுள்ளது.

அதாவது அவர் தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக அறிவிக்க பின் தனது இருப்பிடத்தை மும்பைக்கு மாற்றினார். பின் தயாரிப்பாளர், இயக்குனர் அவதாரங்கள் எடுப்பதாக அறிவித்தவர் தனது பெயர் இனி ஜெயம் ரவி கிடையாது ரவி மோகன் என்றும் கூறியிருந்தார்.

தற்போது அவரை தொடர்ந்து மற்றொரு நடிகரின் பெயர் மாற்றப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது நவரச நாயகன் கார்த்திக் மகன் என்ற அடையாளத்தோடு சினிமாவில் நுழைந்தவர் தான் கௌதம் கார்த்திக். நாயகனாக அறிமுகமாகி படங்கள் நடித்தாலும் பெரிய வெற்றியை இவர் காணவில்லை என்று தான் கூற வேண்டும்.

இந்த நிலையில் இவர் தனது பெயரை திடீரென கௌதம் ராம் கார்த்திக் என மாற்றியுள்ளார். பெயருக்கு நடுவில் ராம் என்று சேர்த்தது எதனால் என்பது தெரியவில்லை.

Related posts

மூக்குத்தி அம்மன் 2 படத்தை இயக்காததன் காரணம் – ஆர்.ஜே. பாலாஜி

admin

நடிகை செளந்தர்யா மரணம் விபத்தல்ல கொலை? பரபரப்பு கடிதம்

admin

குட் நியூஸ் ஒன்றை வெளியிட்டுள்ள குட் பேட் அக்லி

admin

Leave a Comment