இந்தியாவிலிருந்து விஞ்ஞான ரீதியாகவும் தேவையறிந்து ஆய்வு செய்யாமல் பஸ்கள் கொள்வனவு செய்ததினால் இலங்கை அரசுக்கு 3010 மில்லியன் ரூபா மேலதிக செலவாகியுள்ளது.
கணக்காய்வாளர் நாயகம் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட 2023 கணக்காய்வு அறிக்கையில் இது வெளிச்சம் காணப்பட்டுள்ளது. இந்திய கடன் திட்டத்தின் கீழ் 20 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு இந்த பஸ்கள் வாங்கப்பட்டன.
முதலில் 2018ம் ஆண்டு 500 பஸ்கள் (54, 35 இருக்கைகள் கொண்ட) வாங்க அமைச்சரவை அனுமதி அளித்தது. ஆனால் 2020ல் புதிய கொள்கையின்படி 600 பஸ்கள் வாங்க நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன. இவற்றுள் 45 இருக்கைகள் மற்றும் 35 இருக்கைகளை கொண்ட பஸ்களே கொள்வனவு செய்யப்படவிருந்தன.
பின்னர் 2023ல் 500 பஸ்கள் வாங்கப்பட்டன, இதில் 32 இருக்கைகள் கொண்ட ஒவ்வொரு பஸ்ஸும் 26,662.50 அமெரிக்க டொலருக்கு வாங்கப்பட்டது.
மொத்தமாக, 500 பஸ்களுக்கு 133.11 மில்லியன் அமெரிக்க டொலர் செலவாகி, பஸ்ஸொன்றின் இலங்கை ரூபா மதிப்பு சுமார் 11.2 மில்லியன் ரூபாவாகும். இது 2018ல் திட்டமிடப்பட்ட விலையை விட 6.2 மில்லியன் ரூபா அதிகம்.