டொரொண்டோ யோர்க்வில்லில்(Yorkville) இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் ஆறு கட்டிடங்கள் முற்றிலும் எரிந்து நாசமானதுடன், பல கட்டிடங்கள் பகுதியளவில் சேதமடைந்தன.
Scollard Street-ல் அமைந்துள்ள ஒரு கட்டடத்திலேயே அதிகாலை 4:30 மணிக்கு தீ ஆரம்பித்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தக் கட்டிடம் புனரமைக்கப்பட்டு வந்த நிலையில் தீ விபத்து இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
தீ கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், தீயணைப்புத் துறையினர் இன்னும் சிறிய தீப்புள்ளிகளை அணைக்கும் பணியில் உள்ளனர். மொத்தம் 10 கட்டிடங்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. தீ விபத்திற்கான காரணம் இதுவரை தெரியவில்லை.