5.2 C
Cañada
March 14, 2025
விளையாட்டு

டைம் அவுட்டில் ஆட்டமிழந்த முதல் பாகிஸ்தான் வீரர்

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணி முதல் சுற்றிலேயே வெளியேறி அந்த நாட்டு ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. இதனையடுத்து பாகிஸ்தானில் உள்ளூர் போட்டி நடைபெற்று வருகிறது.

இந்த தொடரில், ஸ்டேட் பேங்க் ஆப் பாகிஸ்தான் அணிக்காக விளையாடிய சவுத் ஷகீல், பிடிவி அணிக்கு எதிரான போட்டியில், பேட்டிங் செய்ய தாமதமாகினார். மூன்று நிமிடங்கள் ஆகியும் அவர் வராததால், பிடிவி அணி கேப்டன் அவுட் கேட்க, நடுவர் அவருக்கு டைம்ட் அவுட் வழங்கினார்.

இந்த நிலையில் போட்டியின் போது சவுத் ஷகீல் படுத்து தூங்கி விட்டதால் பேட்டிங் செய்ய அவரால் வர முடியவில்லை என்பது தற்போது தெரிய வந்திருக்கிறது. இது ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது. இதன் மூலம் பாகிஸ்தான் கிரிக்கெட்டிலே முதல் முறையாக டைம்ட் டவுட் ஆன வீரர் என்ற மோசமான சாதனையை சவுத் ஷகீல் படைத்திருக்கிறார்.

இதனால், ஏற்கனவே தொடர் தோல்வியால் சோகத்தில் இருந்த பாகிஸ்தான் ரசிகர்கள் மேலும் விரக்தியடைந்தனர். இந்த போட்டியில் முஹம்மது ஷாசாத் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஐ.சி.சி. சிறந்த வீரர் விருதை வென்ற இந்திய வீரர் சுப்மன் கில்

admin

லாஸ் வேகாஸ் போட்டிகளிலிருந்து ஜானிக் சின்னர் நீக்கம்

admin

வெப் தொடரில் நடிக்கும் இந்திய முன்னாள் கேப்டன் கங்குலி

admin

Leave a Comment