இயக்குநர் சுந்தர்.சி. தயாரிக்கவுள்ள படம் ‘மூக்குத்தி அம்மன் 2’. மேலும் வேல்ஸ் நிறுவனம், ரௌடி பிக்சர்ஸ், அவ்னி சினி மேக்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கவுள்ளன.
இப் படத்தில் நயந்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். முதல் பாகம் போல் இல்லாமல் பாகத்தினை பிரமாண்டமாக தயாரிக்க தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டு உள்ளது.
இந்த நிலையில், ‘மூக்குத்தி அம்மன்2’ திரைப்படத்திற்கான பூஜை இன்று விமர்சையாக நடைபெற்றது. பூஜை விழாவிற்காக பிரம்மாண்டமான கோவில் போன்ற செட்டை அமைத்து யாகம் வளர்த்து பூஜை நடைபெற்றது. பூஜையில் தயாரிப்பாளர்கள், இயக்குநர் சுந்தர்.சி., நடிகர்கள், நடிகைகள் என பலரும் கலந்து கொண்டனர்.