5.2 C
Cañada
March 14, 2025
இலங்கை

5 இலட்சம் ரூபா ஒப்பந்தத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ள கொலை

மீகஸ்ஆரே கஜ்ஜா என அழைக்கப்படும் அருண விதானகமகே 5 இலட்சம் ரூபா ஒப்பந்தத்தில் கொலை செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது.

இதில் இரண்டரை இலட்சம் ரூபா சந்தேகநபரின் மனைவியின் வங்கிக்கணக்கில் வைப்பிலிடப்பட்டு, மீதிப் பணம் பின்னர் வழங்கப்படும் என உடன்பாடு செய்யப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும் இதுவரை அந்த பணம் சந்தேகநபருக்கு வழங்கப்படவில்லை என்பது மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.

கடந்த பெப்ரவரி 18ஆம் திகதி மித்தெனிய பகுதியில் மீகஸ்ஆரே சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், இந்த சம்பவத்தில் காயமடைந்த அவரது 2 பிள்ளைகளும் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட புதிய வாகனங்களை மீள் ஏற்றுமதி செய்வது தொடர்பிலான தகவல்

admin

ஒரு சிறுவருக்கு ஏறத்தாழ 30,000 ரூபா ஒதுக்கப்படுகிறதா?

admin

உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் அவதானம்!

ulagaoula

Leave a Comment