7.4 C
Cañada
March 14, 2025
சினிமா

பாலிவுட் சினிமா மிகவும் Toxic ஆகிவிட்டது- நடிகர் அனுராக் காஷ்யப்

பிரபல இந்தி இயக்குனரும் நடிகருமான அனுராக் காஷ்யப், இவர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மகாராஜா திரைப்படத்தில் வில்லனாக நடித்து இருந்தார்.

பாலிவுட்டில் பல ஹிட் படங்களை இயக்கிய அனுராக் கஷ்யப் சமீப காலமாக இந்தி சினிமாவைவிட தென்னிந்திய படங்களில் அதிகளவில் ஆர்வம் காட்டி வருகிறார். மேலும், மும்பையில் வசிக்கும் அனுராக் இந்தாண்டு தென் இந்தியாவிற்கு குடியேற போவதாக கடந்த மாதம் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், தான் பாலிவுட்டில் இருந்து விலக விரும்புவதாக அறிவித்துள்ளார். திரைப்படத் துறையில் பணிபுரிபவர்களிடம் இருந்து நான் விலகி இருக்க விரும்புகிறேன். இந்த துறை மிகவும் Toxic ஆகிவிட்டது. என சமீபத்திய பேட்டி ஒன்றில் குறிப்பிட்டு இருந்தார்.

மேலும் அனைவரும் ரூ.500 கோடி, ரூ.800 கோடிகளில் திரைப்படம் எடுக்க வேண்டும் என நினைக்கின்றனர். இதனால் அங்கு கலைக்கான மதிப்பு போய் விட்டதாகவும் தெரிவித்தார்.

Related posts

ரவி மோகனை தொடர்ந்து தனது பெயரை மாற்றியுள்ள பிரபல நடிகர் கௌதம் கார்த்திக்

admin

இயக்குநர் லோகேஷ் கனகராஜின் சொத்து மதிப்பு பற்றிய விபரம்

admin

குட் பேட் அக்லி படத்தின் டீசர் மேக்கிங் வீடியோ வெளியானது

admin

Leave a Comment