5.2 C
Cañada
March 14, 2025
இலங்கை

இலங்கை போக்குவரத்து சேவையில் இனி பெண்கள்

இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தொடருந்து சேவையில் பெண்களை நியமிப்பதற்கான கொள்கை முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க(Bimal Rathnayake) தெரிவித்துள்ளார்.

இன்று (07) நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தின் போதே அவர் இதனைத் கூறியுள்ளார்.  மேலும் நாளை மகளிர் தினத்தை முன்னிட்டு, அமைச்சின் அமைச்சர்கள் இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தொடருந்து சேவையில் பெண்களை நியமிக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.

பெண்கள் இன்னும் சில நாட்களில் பேருந்து ஓட்டுநர்கள், விமானிகள் மற்றும் காவலர்களாக பணியாற்ற முடியும். நாளை மகளிர் தினத்தை முன்னிட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டது. அத்துடன், பாடசாலை பேருந்துகளை பெண்களுக்கு ஒப்படைக்க வேண்டும் என்ற கனவும் உள்ளதாக தெரிவித்தார்.

அத்தோடு  நாடு முழுவதும் உள்ள பாதுகாப்பற்ற தொடருந்து கடவைகள் அடையாளம் காணப்பட்டு அடுத்த ஆண்டுக்குள் சீரமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

Related posts

கடன் அட்டை பயன்பாடு குறித்து மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்

admin

ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் யானைகளை பாதுகாக்கும் புதிய முயற்சி

admin

அனுராதபுர சம்பவத்தினை முன்னிட்டு மருத்துவர்கள் 24 மணிநேர பணிப்புறக்கணிப்பு

admin

Leave a Comment