9.6 C
Cañada
March 13, 2025
இலங்கை

சர்வதேச ஊடகங்களின் சர்ச்சைக்குரிய நேர்காணலினால் கோபமடைந்த ரணில்

அல்ஜசீரா சர்வதேச ஊடகத்திற்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வழங்கிய நீண்ட நேர்காணல் தொடர்பில் சர்வதேச ரீதியில் சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது. குறித்த கலந்துரையாடலில் பெரும்பகுதி மறைக்கப்பட்டு வெளியிடப்படவில்லை என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குற்றம் சாட்டியுள்ளார்.

கடந்த பெப்ரவரி மாதம் ரணில் விக்ரமசிங்க பிரித்தானியா சென்றிருந்த போது பதிவு செய்யப்பட்ட நேர்காணல் நேற்று அல்ஜசீரா தொலைக்காட்சியில் வெளியிடப்பட்ட நிலையில் அதில் நிகழ்ச்சி தொகுப்பாளர் எழுப்பிய கேள்விகளுக்கு முன்னாள் ஜனாதிபதி பதிலளித்த போது சூடான நிலை ஏற்பட்டது.

இதில் இலங்கையில் மறைக்கப்பட்ட பல ரகசிங்கள் குறித்து ஆதாரங்களுடன் கேள்வி எழுப்பப்பட்டன. இது குறித்து ரணில் விக்ரமசிங்க நேற்று ஊடகங்களுக்கு தனது கருத்துக்களை தெரிவித்தார்.

அதில் தான் பேசியவற்றை முழுமையாக வெளியிடவில்லை. அவ்வாறு வெளியிட்டிருந்தால் இதனை விடவும் சிறந்த பதில்கள் வழங்கியதனை பார்த்திருக்க முடியும் என தெரிவித்தார். எனினும் இது எடிட் செய்து வெளியிடப்பட்டுள்ளதனால் அதற்கு ஒன்றும் செய்ய முடியாதென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

தங்க நகைகளுடன் இந்தியாவுக்கு தப்பியோடியுள்ள செவ்வந்தி

admin

பெண் மருத்துவரை பாலியல் சீண்டலுக்கு உட்படுத்திய சந்தேகநபர் வாக்குமூலம்

admin

முடிவுக்கு வந்த வைத்தியர்களின் போராட்டம்

admin

Leave a Comment