இலங்கைக்கு இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட்ட வாகனங்கள் 90 நாட்களுக்குள் பதிவுசெய்யப்பட வேண்டும் என நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அத்தோடு, யாராவது ஒரு இறக்குமதியாளரினால் இறக்குமதி செய்யப்பட்ட மொத்த வாகனங்களில் 25 சதவீதமானவை ஆறு மாதங்களுக்குள் பதிவுசெய்யப்படாவிட்டால் குறித்த இறக்குமதியாளருக்கு வழங்கப்பட்ட அனுமதி இரத்துச் செய்யப்படும் என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
பதிவுசெய்யப்படாத வாகனங்களுக்கு ஆகக் கூடியது 45 சதவீதம் வரையில் விதிக்கக் கூடியதாக மூன்று சதவீத தண்டப்பணம் அறவிடப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தள்ளமை குறுிப்பிடத்தக்கது.