6.3 C
Cañada
March 14, 2025
இலங்கை

7 ஆண்டுகளுக்குப் பின் அரச சேவையில் முகாமைத்துவ உத்தியோகத்தர்களை நியமிக்க அரசு எடுத்துள்ள முடிவு

7 ஆண்டுகளுக்குப் பின்னர் அரச சேவையில் முகாமைத்துவ உத்தியோகத்தர்களை நியமிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதன் அடிப்படையில், அரச சேவையில் முகாமைத்துவ உத்தியோகத்தர்களை நியமிக்க மே மாதத்தில் திறந்த போட்டிப் பரீட்சை நடைபெறும்.

2020ஆம் ஆண்டு திட்டமிடப்பட்ட பரீட்சைக்கான விண்ணப்பங்கள் அடிப்படையாகக் கொண்டு, 1 இலட்சத்து 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். தேர்வு முடிவுகளின் அடிப்படையில் 2,200 பேர் ஆட்சேர்ப்பு செய்யப்படவுள்ளனர்.

தற்போது முகாமைத்துவ அதிகாரிகளுக்கான 4,000 க்கும் மேற்பட்ட வெற்றிடங்கள் உள்ளதாக பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். கடைசியாக நிர்வாக அதிகாரிகள் 2018ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் யானைகளை பாதுகாக்கும் புதிய முயற்சி

admin

மிகப்பெரிய மீன்பிடிக் கப்பலைத் தயாரித்த இலங்கை

admin

தமிழரசுக் கட்சி அடுத்த தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக அறிவிப்பு

admin

Leave a Comment