அமைச்சரவை கூட்டத்தில் எலான் மஸ்க்கிடம் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ (Marco Rubio ) கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவில் அரசு ஊழியர்களை பதவி நீக்கம் செய்யும் நடவடிக்கையில் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் எலான் மஸ்க் ஈடுபட்டு வருகிறார்கள். அரசு ஊழியர்கள் தாங்கள் மேற்கொண்ட பணிகள் குறித்து மின்னஞ்சலில் தெரியப்படுத்த வேண்டும் என்றும் இவ்வாறு தெரிவிக்காத ஊழியர்கள் உடனடியாக பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்று எலான் மஸ்க் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் ட்ரம்ப் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்வது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, எலான் மஸ்க் இடையே கடும் வார்த்தை மோதல் எற்பட்டுள்ளது. இந்த மோதலால் அமைச்சரவை கூட்டம் நடந்த அரங்கத்தில் பரபரப்பான சூழல் நிலவியுள்ளது.