எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நாடாளுமன்ற உறுப்புரிமையில் இருந்து விலகுவதாக யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போது தெரிவித்துள்ளார்.
மேலும், தான் பதவியில் இருந்து விலகி பெண் பிரதிநிதி ஒருவருக்கு அந்த வாய்ப்பை வழங்கவுள்ளதாகவும் அர்ச்சுனா இதன்போது குறிப்பிட்டார்.
அத்துடன், தற்போது பெண்களின் சுதந்திரம் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளதாகவும், நண்பல் 12 மணியளவிலும் கூட பெண்கள் வெளியில் சுதந்திரமாக நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அர்ச்சுனா சபையில் சுட்டிக்காட்டினார்.