வேல்ஸ் நிறுவனம், ரௌடி பிக்சர்ஸ், அவ்னி சினி மேக்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்ற ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தை சுந்தர்.சி இயக்கி வருகின்றார். இதில் நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.
பிரமாண்டமாக தயாரிக்கப்படும் இப் படத்தின் பொருட்செலவு 100 கோடி ரூபாய் மேல் இருக்கும் என கூறப்படுகிறது.
இந்த நிலையில், ‘மூக்குத்தி அம்மன்2’ திரைப்படத்திற்கான பூஜை விமர்சையாக நடைபெற்றது. பூஜையில் தயாரிப்பாளர்கள், இயக்குநர் சுந்தர்.சி., நடிகர்கள், நடிகைகள் என பலரும் கலந்து கொண்டனர். இந்நிலையில் படத்தின் முதல் ஷாட் எடுத்ததை படக்குழு வீடியோவாக எடுத்து படப்பிடிப்பு தொடங்கியதை அறிவித்துள்ளனர்.