10.2 C
Cañada
March 14, 2025
உலகம்

அமெரிக்கா – இஸ்ரேல் உறவில் விரிசல்?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இடையே நட்பு என்பது அதிகரித்து வருகிறது. இதனால் ஐரோப்பிய நாடுகள் மட்டுமின்றி நெருங்கிய நட்பு நாடான இஸ்ரேலும், அமெரிக்கா மீது அதிருப்தியில் உள்ளது.

இப்படியான சூழலில் உளவு தகவல்களை பகிர்வதில் இஸ்ரேல் உள்பட 6 நாடுகள் முக்கிய முடிவை எடுக்க உள்ளது. இதன்மூலம் அமெரிக்கா -இஸ்ரேல் இடையேயான உறவில் விரிசல் வரலாம் என்ற பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.

உக்ரைன் மீதான ரஷ்யா 3 ஆண்டுகளாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைன் போருக்கு அமெரிக்கா கடும் எதரிப்பு தெரிவித்தது. போரை நிறுத்த வேண்டும் என்று கூறியது. ஆனால் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கேட்கவில்லை. இதனால் ரஷ்யா மீது அமெரிக்கா கடும் பொருளாதார தடைகளை விதித்தது.

அமெரிக்காவின் கூட்டாளிகளான ஐரோப்பிய நாடுகளும் ரஷ்யா மீது கடும் பொருளாதார தடைகளை விதித்தது. அதுமட்டுமின்றி ரஷ்யாவை எதிர்கொள்ள அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு உதவியை செய்தன.

இவை அனைத்தும் அமெரிக்காவின் அதிபராக ஜோ பைடன் இருக்கும் வரை மட்டுமே நீடித்தது. ஆனால் இப்போது அமெரிக்காவின் அதிபராக டொனால்ட் டிரம்ப் பொறுப்பேற்று செயல்பட்டு வருகிறார்.

உக்ரைனை கடுமையாக விமர்சித்த டிரம்ப், ரஷ்யாவின் பக்கம் சாய்ந்தார். உக்ரைன் மீதான போர் நடவடிக்கையை கைவிட வேண்டும் புதினிடம் தொலைபேசியில் பேசினார். அதன்பிறகு இருநாட்டு பிரதிநிதிகளும் சவுதி அரேபியால் சந்தித்து பேசினர். போர் நிறுத்தம், இருதரப்பு வர்த்தக உறவு பற்றி விவாதித்தனர். இதில் ஐரோப்பிய நாடுகளையும், உக்ரைனும் அவர் கழற்றி விட்டார். இதனால் அமெரிக்கா மீது உக்ரைன் மற்றும் ஐரோப்பிய நாடுகள் அதிருப்தியடைந்தன.

Related posts

அணுசக்தி ஒப்பந்தம் குறித்த டிரம்ப் மிரட்டலுக்கு பயப்பட மாட்டோம்-அயதுல்லா அலி

admin

போர் நிறுத்தம் அமலுக்கு வருமா? போர் மீண்டும் தொடருமா?

admin

அர்ஜென்டினாவில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 10 பேர் பலி

admin

Leave a Comment