இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து மற்றும் பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் உருவாகி வெளியான டிராகன் திரைப்படம் வெளியாகி 10 நாட்களில் 100 கோடி ரூபாயை உலகளவில் வசூலித்துள்ளது. அத்தோடு படம் வெளியாகி பொது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. வரும்வாரங்களில் 150 கோடி வசூலை எட்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த நிலையில், டிராகன் திரைப்படம் இந்தி மொழியில் வெளியாக இருப்பதை படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
டிராகன் படத்தின் இந்தி பதிப்பு டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி டிராகன் இந்தி பதிப்பு வருகிற 14-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.