5.2 C
Cañada
March 14, 2025
இலங்கைவணிகம்

ஏலத்திற்கு வரவுள்ள இலங்கை மத்திய வங்கியின் திறைசேரி உண்டியல்கள்

1,65,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், எதிர்வரும் 11ஆம் திகதி ஏல விற்பனையினூடாக வழங்கப்படவுள்ளதாக  இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இதன்படி, 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 30,500 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும், 182 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 55,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் ஏல விற்பனையினூடாக வழங்கப்படவுள்ளது.

அத்தோடு 364 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 80,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் ஏல விற்பனையினூடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. 

Related posts

காலி – அக்மீமன பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

admin

நாளாந்தம் 4,000 முதல் 4,500 வரை கடவுச்சீட்டுகளை விநியோகிக்க நடவடிக்கை

admin

ஒரு சிறுவருக்கு ஏறத்தாழ 30,000 ரூபா ஒதுக்கப்படுகிறதா?

admin

Leave a Comment