10.2 C
Cañada
March 14, 2025
இலங்கை

தமிழர் பகுதியில் சட்டவிரோதமாக விபச்சாரத்தில் ஈடுபட்ட 3 பெண்கள் கைது

மட்டக்களப்பு பாசிக்குடாவில் நீண்டகாலமாக ஹோட்டல் என்ற பேர்வையில் விபச்சார விடுதி நடாத்தி வருவது தொடர்பாக மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிசாருக்கு கிடைத்த தகவலை அடுத்து நேற்று மாலை விடுதி ஒன்றை முற்றுகையிட்ட பொலிசார் பெண் முகாமையாளர் உட்பட 3 பெண்களை கைது செய்துள்ளனர்.

சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜி.லலித் லீலாரத்தினவின் ஆலோசனைக்கமைய மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸ் பரிசோதகர் ரி.மேனன் தலைமையிலான பொலிசார் குறித்த விபச்சார விடுதி தொடர்பாக நீதிமன்றத்திற்கு அறிக்கை ஒன்றை சமர்பித்து அனுமதியை பெற்ற பின்னர் குறித்த விடுதியை சம்பவதினமான நேற்று மாலை 5.00 மணிக்கு முற்றுகையிட்டனர்.

அங்கு விபச்சாரத்தில் ஈடுபட்டுவந்த இரண்டு பெண்கள் மற்றும் விடுதியின் பெண் முகாமையாளர் உட்பட 3 பெண்களை கைது செய்யப்பட்டதுடன், அவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாக பொலிசார் தெரிவித்தனர்.

Related posts

தமிழரசுக் கட்சி அடுத்த தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக அறிவிப்பு

admin

சர்வதேச ஊடகங்களின் சர்ச்சைக்குரிய நேர்காணலினால் கோபமடைந்த ரணில்

admin

மாதம்பேயில் முச்சக்கர வண்டியும் பேருந்தும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து

admin

Leave a Comment