5.2 C
Cañada
March 14, 2025
உலகம்

மியான்மாரில் பொதுத்தேர்தலுக்கான அறிவிப்பு – முடிவுக்கு வரும் இராணுவ ஆட்சி

மியான்மாரில் 2021 இல் ஆட்சியை கவிழ்த்து இராணுவம் அதிகாரத்தை கைப்பற்றிய நிலையில் 4 வருட இராணுவ ஆட்சிக்கு பிறகு மியான்மாரில் ஜனநாயக முறையில் பொதுத் தேர்தல் நடத்தப்படுவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

மியான்மாரின் இராணுவத் தலைவர் ஜெனரல் மின் ஆங், டிசம்பர் மாதத்திற்குள் அல்லது 2026 ஜனவரி மாதத்திற்குள் தேர்தல்கள் நடத்தப்படும் என கூறியுள்ளார். அத்தோடு இத் தேர்தலில் போட்டியிட ஏற்கனவே மியான்மாரின் 53 அரசியல் கட்சிகள் விருப்பம் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு ஆவுன் சன் சுகியின் ஆட்சியைக் கவிழ்த்து இராணுவ அரசு அமைக்கப்பட்டதற்கு எதிராக அந்நாட்டு மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அத்தோடு ஜனநாயக ஆதரவு போராளிகளும், தன்னாட்சி கோரும் சில இனக்குழுக்களைச் சேர்ந்த கிளர்ச்சியாளர்களும் மியான்மார் இராணுவத்திற்கு எதிராக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நேரத்தில் இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.

Related posts

கனடாவின் புதிய பிரதமராக பதவி ஏற்ற மார்க் கார்னி

admin

அர்ஜென்டினாவில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 10 பேர் பலி

admin

200 சீன மோசடி சந்தேக நபர்கள் மியன்மாரிலிருந்து நாடு திரும்பினர்

admin

Leave a Comment