9.1 C
Cañada
March 14, 2025
தொழில்நுட்பம்

முதல்முறையாக அணுசக்தி கப்பலை வெளிக்காட்டிய வடகொரியா

வடகொரியா முதல் முறையாக அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. இவை தற்போது கட்டுமானத்தில் உள்ள இந்த நீர்மூழ்கிக் கப்பலின் புகைப்படங்கள் ஆகும்.

அவற்றில், போர்க்கப்பல்கள் கட்டப்படும் முக்கிய கப்பல் கட்டும் தளங்களுக்கு வந்து கிம் ஜாங் உன் பார்வையிடுவது தெரிகிறது.

இந்த நீர்மூழ்கிக் கப்பல் ஆபத்தானது என தென்கொரிய நீர்மூழ்கிக் கப்பல் நிபுணர் Moon Keun-sik கூறியுள்ளார். மேலும் இவர் இது குறித்து கூறுகையில் கடற்படைக் கப்பல் 6,000 டன்-வகுப்பு அல்லது 7,000 டன்-வகுப்பு கொண்ட ஒன்றாகத் தெரிகிறது. இது சுமார் 10 ஏவுகணைகளை சுமந்து செல்லக்கூடியது என தெரிவித்துள்ளார்.

அமெரிக்க தலைமையிலான ராணுவ அச்சுறுத்தல்களை சமாளிக்க, அதிநவீன ஆயுதங்களின் நீண்ட விருப்பப் பட்டியலை தயார் செய்து இருப்பதாக 2021யில் நடந்த அரசியல் மாநாட்டில் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் தெரிவித்தார். அப்பட்டியலில் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் மற்ரும் ஹைப்பர்சோனிக் ஆயுதங்கள் போன்றவை அடங்கும். 

Related posts

2025 BMW C 400 GT பிரீமியம் மேக்ஸி-ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம்

admin

9 மாதங்களுக்கு பிறகு பூமி திரும்பவுள்ள சுனிதா வில்லியம்ஸ்

admin

கடும் வீழ்ச்சியை சந்தித்து வரும் டெஸ்லா நிறுவனம்

admin

Leave a Comment