இலங்கை தமிழரசுக்கட்சி இம்முறை தனித்தே உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக போட்டியிடும் பேச்சுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும் இவர் எதிர்வரும் வாரத்திற்குள் இலங்கை தமிழரசுக்கட்சியின் வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடுள்ளார்.