இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான “ஜெயிலர்” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதுடன், வசூல் ரீதியாகவும் பல கோடிகளை குவித்தது. இதை தொடர்ந்து இப் படத்திற்கான இரண்டாம் பாகம் உருவாகி வருகின்றது.
இந்த நிலையில், ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு இன்று ஆரம்பிக்கப்பட்டதை படத்தயாரிப்பு நிறுவனம் அதன் எக்ஸ் தள பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
முதற்கட்டமாக 15 நாட்கள் படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.