கடவுச்சீட்டுக்கள் தொடர்பில் நிலவும் பிரச்சினைகளை நிவர்த்திப்பதற்கு 4 மணித்தியால சேவையின் கீழ் நாளாந்தம் 4,000 முதல் 4,500 வரையான கடவுச்சீட்டுகளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
திங்கட்கிழமை காலை 6 மணி முதல், வௌ்ளிக்கிழமை நண்பகல் 12 மணி வரை காலப்பகுதிக்குள் கடவுச்சீட்டுக்களை பெற்றுக்கொள்ள முன் பதிவு செய்ய முடியும்
இக் கடவுச்சீட்டு விநியோகிக்கத்தை விரைவுபடுத்துவதற்காக ஒருநாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டுகளை கோருபவர்களுக்கு 24 மணித்தியாலங்களுக்குள் அந்த சேவையை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக குடிவரவு, குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.