பிரித்தானிய அரசு பணியாளர்களின் எண்ணிக்கையை குறைத்து, செயற்கை நுண்ணறிவை (AI) பயன்பாட்டில் கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளதாகஅமைச்சரவை உறுப்பினர் பேட் மெக்ஃபாடன் (Pat McFadden) ஞாயிற்றுக்கிழமை BBCக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
அரசுத்துறையின் திறனை அதிகரிக்க டிஜிட்டல் மற்றும் செயற்கை நுண்ணறிவின் பயன்பாட்டை அரசு விரைவுபடுத்தவுள்ளது. “செயற்கை நுண்ணறிவு (AI) அல்லது டிஜிட்டல் தொழில்நுட்பம் வேலையைச் சிறப்பாக செய்யக்கூடியதாக இருந்தால், அதற்காக மனித வளத்தைக் பயன்படுத்த வேண்டாம்” என அவர் தெரிவித்தார்.
2023-இல், அரசு பணியாளர்களின் எண்ணிக்கை 5,13,000-ஐ கடந்து, இது 2016-க்கு நிகராக 34% அதிகரித்துள்ளது. அதிக அரசு பணியாளர்கள் என்பது வரி செலுத்துவோருக்கு நடக்கும் அநியாயம் எனவும், பிரித்தானியா மட்டும் தான் G7 நாடுகளில் முந்தைய வேலைவாய்ப்பு அளவிற்கு மீண்டும் செல்லவில்லை. இதை மாற்ற வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.