மாதம்பே கலஹிடியாவ பகுதியில் முச்சக்கர வண்டியும் பேருந்தும் நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில் இரண்டு பெண்களும் ஒரு வயது குழந்தையும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று மாலை (09) தலவில புனித அன்னாள் தேவாலயத்தில் திருவிழா முடித்து வீடு திரும்பி கொண்டிருந்த போது இவ் விபத்து நடைபெற்றுள்ளது. இறந்தவர்கள் 32, 36 வயதுடைய பெண்கள் மற்றும் ஒரு வயது குழந்தை என்பதோடு அனைவரும் மினுவங்கொட மற்றும் ராகமவைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.
முச்சக்கர வண்டியில் ஓட்டுநர் உட்பட ஒன்பது பேர் பயணித்ததாக தெரிய வந்துள்ளது. இவ் விபத்தில் முச்சக்கர வண்டி ஓட்டுநர் உட்பட இரண்டு ஆண்கள், இரண்டு சிறுவர்கள் மற்றும் இரண்டு சிறுமிகள் காயமடைந்து சிலாபம் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக பேருந்து ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றது.