கட்டுநாயக்க விமான நிலையத்தில் 17 .5 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான ஹசீஸ் போதைப்பொருளுடன் கனேடிய பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
போதைப்பொருள் அடங்கிய பொதியை பயணப்பையில் மறைத்து வைத்து கனடாவின் டொறண்டோவிலிருந்து EY-396 விமானத்தின் ஊடாக இப் பெண் இலங்கைக்கு நேற்றிரவு வருகை தந்துள்ளார்.
20 வயதான இப் பெண்ணிடம் இருந்து 17 கிலோகிராம் 573 கிராம் ஹசீஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.