2025 ஆம் ஆண்டிற்கான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி நேற்று துபாயில் நடந்தது. பரபரப்பான போட்டியில் இந்திய அணி நியூசிலாந்தை வீழ்த்தி மூன்றாவது முறையாக சாம்பியன்ஸ் டிராபியை தன்வசப்படுத்தியது.
இந்திய அணி மூன்று சாம்பியன்ஸ் டிராபிகளை வென்ற முதல் அணியாக புதிய வரலாறு எழுதியது. மேலும் இந்தியா 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் பெருமையை பெற்றுள்ளது.
முதலில் பந்து வீசிய இந்திய அணி, நியூசிலாந்தை 50 ஓவர்களில் 251/7 ஓட்டங்களுக்கு கட்டுப்படுத்தியது. குல்தீப் யாதவ் (2/40) மற்றும் வருண் சக்ரவர்த்தி (2/45) முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இவ் வெற்றியை கொண்டாடும் விதமாக இந்திய கேப்டன் ரோகித் சர்மா மற்றும் நட்சத்திர வீரர் விராட் கோலி ஆகியோர் களத்தில் ஸ்டம்ப்களை கையில் வைத்துக் கொண்டு நடனம் ஆடினர். மேலும் கோப்பையுடன் ஒவ்வொருத்தரும் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய நிலையில், வீரர்கள் ஒன்றாக இணைந்து நடனம் ஆடியும் கொண்டாடினர்.