10.2 C
Cañada
March 14, 2025
தொழில்நுட்பம்

9 மாதங்களுக்கு பிறகு பூமி திரும்பவுள்ள சுனிதா வில்லியம்ஸ்

சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்பி வருவது தொடர்பான அறிவிப்பை நாசா வெளியிட்டுள்ளது. இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் நாசா விண்வெளி ஆய்வு மையத்தில் பணியாற்றி வருகிறார். கடந்த ஜூன் 5 ம் தேதி ஸ்டார்லைனர் விண்கலன் மூலம் 3 வது முறையாக சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பேரி வில்மோர் ஆகியோர் விண்வெளி நிலையம் சென்றனர். 

8 நாட்கள் அங்கு தங்கி ஆய்வு செய்துவிட்டு பூமிக்கு திரும்புவதாக திட்டமிட்டிருந்த நிலையில் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக பூமிக்கு திரும்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஏறத்தாழ 9 மாதங்கள் விண்வெளி மையத்திலேயே தங்கினர்.

தற்போது எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலத்தின் மூலம் மார்ச் 16 ஆம் திகதி பூமிக்கு அழைத்து வரப்படவுள்ளதாக நாசா அறிவித்துள்ளது.

Related posts

சைபர் தாக்குதல் காரணமாக முடக்கப்பட்ட எக்ஸ் தளம்

admin

2025 BMW C 400 GT பிரீமியம் மேக்ஸி-ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம்

admin

கடும் வீழ்ச்சியை சந்தித்து வரும் டெஸ்லா நிறுவனம்

admin

Leave a Comment