பிரித்தானியாவுக்கு வடக்காக உள்ள கடற்பகுதியில் சரக்கு கப்பல் ஒன்றும் எண்ணெய் தாங்கி கப்பல் ஒன்றும் மோதியதில் 32 பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்தவர்கள் பிரித்தானியாவின் கிழக்கு யோக்ஷயர் பிராந்தியத்தின் கரைக்கு அழைத்து வரப்பட்டனர். மேலும் இவ் விபத்தால் எரிபொருள் தாங்கிக் கப்பல் தீப்பற்றியதாகவும் அதிலிருந்த அனைத்து பணியாளர்களும் பாதுகாப்பாக உள்ளனர் எனவும் கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
போர்த்துக்கல் கொடியுடன் கூடிய எரிபொருள் தாங்கிக் கப்பல் நங்கூரமிட்டிருந்தபோது அமெரிக்கக் கொடியுடன் கூடிய சரக்கு கப்பல் அதனுடன் மோதியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.