நடிகை சமந்தா விவாகரத்துக்கு பிறகு மயோசிட்டிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டதுடன், மன அமைதிக்காக ஆன்மீகத்தில் ஈடுபாடு காட்டி வந்தார்.
தற்போது மீண்டும் சினிமாவில் பிசியாக நடித்து வரும் நிலையில் மீண்டும் காதலில் விழுந்திருப்பதாகவும் செய்திகள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது.
இயக்குனர் Raj Nidimoru என்பவர் உடன் தான் சமந்தா பற்றிய கிசுகிசு வந்துகொண்டிருக்கிறது. ஒரு வாரத்திற்கு முன்பு அவர்கள் ஜோடியாக ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஸ்டில்களும் வைரல் ஆகி இருந்தது. அதைத் தொடர்ந்து இருவரும் ஒன்றாக நண்பரின் பிறந்தநாள் பார்ட்டியில் கலந்துகொண்ட புகைப்படமும் வைரல் ஆகி வருகின்றது.