இந்த வருடத்தில் 25 இலட்சம் தென்னங்கன்றுகளை நடுவதற்குத் திட்டமிட்டுள்ளதாக தென்னைப் பயிர்ச்செய்கை சபையின் தலைவர் வைத்தியர் சுனிமல் ஜயகொடி இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் இவர் வடக்கின் முக்கோண வலயத்தில் 10 இலட்சம் மற்றும் ஏனைய பிரதேசங்களில் 15 இலட்சம் தென்னங்கன்றுகளை நடுவதற்குத் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில் 2024 ஆம் ஆண்டில் தென்னை உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளது. தேங்காய் பற்றாக்குறையைக் கருத்திற் கொண்டு இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.அதன் ஆரம்ப கட்டமாக கடந்த மாதம் 17 ஆம் திகதி கம்பஹா மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டது.