அனுராதபுரம் போதனா மருத்துவமனையில் பெண் மருத்துவர் தவறான நடத்தைக்கு உட்படுத்தப்பட்டமையை எதிர்த்து, இன்று காலை 8:00 மணி முதல் 24 மணி நேர நாடு தழுவிய அடையாள பணி ப்புறக்கணிப்பை மேற்கொள்ள அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் மற்றும் மருத்துவ நிபுணர்கள் சங்கம் என்பன முடிவு செய்துள்ளன.
விரைவான மற்றும் பாரபட்சமற்ற விசாரணையை நடத்தவும், குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்தவும், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க உடனடி பாதுகாப்பு நடவடிக்கைகளை செயல்படுத்தவும், அந்த சங்கம் திகாரிகளை வலியுறுத்தியுள்ளது.
அத்தோடு குறிப்பாக இரவு ஷிப்டுகளில் பணிபுரியும் மற்றும் பயிற்சி பெறுபவர்களுக்கு பாதுகாப்பான தங்குமிடங்கள் மற்றும் சிறந்த வசதிகளுக்கான அவசரத் தேவையையும், சங்கம் உணர்த்தியுள்ளது.