6.3 C
Cañada
March 14, 2025
உலகம்

அமெரிக்காவின் கட்டளைக்கு செவி சாய்க்க மறுத்த ஈரான்

அமெரிக்காவிடம் இருந்து அச்சுறுத்தல் விடுக்கப்பட்டாலும், ஈரான் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தாது என்று ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியன் அதிரடியாக அறிவித்துள்ளார்.

புதிய அணுசக்தி ஒப்பந்தம் குறித்து ஈரான் பேச்சுவார்த்தையில் ஈடுபட வலியுறுத்தி கடிதம் அனுப்பியதாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்த நிலையில், அமெரிக்கா உத்தரவு போடுவதையும், மிரட்டுவதையும் ஈரானால் ஏற்றுக்கொள்ள முடியாது என ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியன் குறிப்பிட்டுள்ளார்.

வெள்ளிக்கிழமை ட்ரம்ப் ஈரானுக்கு எழுதிய கடிதத்தில், புதிய அணுசக்தி பேச்சுவார்த்தைகளை வலியுறுத்தும் அதே வேளை, ஈரான் மறுத்தால் இராணுவ நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று எச்சரிக்கை விடுத்திருந்தார். அமெரிக்காவின் பேச்சுவார்த்தைகள் பிரச்சினைகளைத் தீர்ப்பதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை, அவை ஆதிக்கம் செலுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன என உச்சத் தலைவர் அலி கமேனி தெரிவித்தார்.

Related posts

அமெரிக்காவில் சுவாமி நாராயணன் கோவில் மீது தாக்குதல்

admin

உலகின் மாசுபட்ட நாடுகள் பட்டியலில் 3ம் இடத்தில் பாகிஸ்தான்

admin

ஐரோப்பிய இறக்குமதிகளுக்கு வரி விதிப்பு – ட்ரம்ப் மிரட்டல்

admin

Leave a Comment