அமெரிக்க ஜனாதிபதியாக ட்ரம்ப் பதவியேற்றதிலிருந்து கனடா உட்பட பல நாடுகள் மீது வரி விதிப்புகளை மேற்கொண்டுள்ளார். பதிலுக்கு கனடா வரி விதிப்பதாக கூறியதற்கு ட்ரம்ப் கோபத்தில் கொந்தளித்துள்ளார்.
ட்ரம்பின் வரி விதிப்புகளுக்கு பதிலடியாக, கனடாவின் ஒன்ராறியோ மாகாணம், மின்சாரத்துக்கு 25 சதவிகித கூடுதல் கட்டணம் விதிக்கப்போவதாக அறிவித்தது. உடனே கோபமடைந்த ட்ரம்ப், ஏற்கனவே கனடா பல அமெரிக்க தயாரிப்புகளுக்கு கூடுதல் வரி விதிக்கிறது. உங்களுக்கு அதற்கு அனுமதி கூட கிடையாது என கொந்தளித்துவிட்டார்.
தனது சமூக ஊடகப் பக்கத்தில், கனடா மீதான தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ள ட்ரம்ப், உங்கள் கார்களும் எங்களுக்கு வேண்டாம், உங்கள் மரக்கட்டைகளும் வேண்டாம், உங்கள் மின்சாரமும் வேண்டாம். அதை நீங்கள் விரைவில் உணர்ந்துகொள்வீர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.