தென்னிந்திய திரையுலகில் 90களின் இறுதியில் தொடங்கி 2000களில் அவர் உயிருடன் இருந்தவரை முன்னணி நடிகையாக வளம் வந்தவர் சௌந்தர்யா. கடந்த 2004 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17ஆம் தேதி நடந்த விமான விபத்தில் தனது 31 ஆவது வயதில் சௌந்தர்யா உயிரிழந்தார்.
இந்நிலையில் உயிரிழந்து 20 வருடங்களின் பின் பிரபல நடிகை சௌந்தர்யாவின் மரணம் விபத்தல்ல என்று முறைப்பாட்டு மனு அளித்துள்ளமை பரபரப்பை ஏற்பட்டுத்தியுள்ளது.
அவருக்கு 2003 இல் ரகு என்ற சாப்ட்வேர் இன்ஜினீயருடன் திருமணமும் நடந்தது. 2004 இல் விபத்து நடந்த அன்றைய தினம் பெங்களூரில் நடக்கும் அரசியல் பிரசாரதிற்காக கரீம்நகரில் இருந்து விமானத்தில் தனது சகோதரர் அமர்நாத்துடன் சௌந்தர்யா புறப்பட்டார். ஆனால் விமானம் எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளனத்தில் இருவரும் உயிரிழநதனர். அந்த சமயத்தில் செளந்தர்யா கர்ப்பமாக இருந்தாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ஆந்திராவை சேர்ந்த சிட்டிமல்லு என்பவர் பொலிஸ் நிலையத்திலும், மாவட்ட ஆட்சியரிடமும் , ‘நடிகை சௌந்தர்யாவின் மரணம் விபத்தல்ல. தெலுங்கு நடிகர் மோகன் பாபுவுக்கும் சௌந்தர்யாவின் கொலைக்கும் தொடர்பு இருப்பதாகவும் மனு அளித்துள்ளதாக கூறப்படுகின்றது.
ஷம்ஷாபாத்தின் ஜல்லேபள்ளியில் சௌந்தர்யாகவுக்கு சொந்தமாக ஆறு ஏக்கர் விருந்தினர் மாளிகை ஒன்று இருந்தது. ஆனால் அந்த நிலத்தை விற்பனை செய்ய சௌந்தர்யாவின் சகோதரர் அமர்நாத் மறுத்திருக்கிறார். விமான விபத்தில் இருவரும் இறந்த பிறகு மோகன் பாபு அந்த மாளிகையை சட்டவிரோதமாக ஆக்கிரமித்துக்கொண்டார்.
இந்நிலையில் நடிகையின் நிலத்தை மீட்டு ஆதரவற்றோர், இராணுவத்தினர் ஆகியோரின் நலனுக்கு வழங்க வேண்டும் என சிட்டிமல்லு மனுவில் குறிப்பிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.