5.2 C
Cañada
March 14, 2025
உலகம்

பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் சொத்துக்கள் முடக்கம்

பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் சொத்துக்கள் முடக்கம் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் சொத்துக்களை முடக்குவதற்கு டாக்கா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அவரது குடும்பத்திற்குச் சொந்தமான 124 வங்கிக் கணக்குகளையும் முடக்குவதற்கு பங்களாதேஷின் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவின் கோரிக்கையை அடுத்து டாக்கா நீதிமன்றத்தின் சிரேஷ்ட நீதிபதி (Zakir Hossain) சாகிர்  ஹுசைன் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

பங்களாதேஷில் பொதுமக்களின் கடும் எதிர்ப்பையடுத்து 77 வயதான ஷேக் ஹசீனா கடந்த  ஆகஸ்ட் 05 ஆம் திகதி இந்தியாவில் அரசியல் தஞ்சமடைந்தார். இந் நிலையில் மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு கடந்த சில நாட்களுக்கு முன்னர் அவரை  கைது செய்வதற்கான பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

Related posts

காசாவிற்கான மின் விநியோகம் தடை – இஸ்ரேல் தீர்மானம்

admin

உலகின் மாசுபட்ட நாடுகள் பட்டியலில் 3ம் இடத்தில் பாகிஸ்தான்

admin

அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் சூறாவளி எச்சரிக்கை

admin

Leave a Comment