5.2 C
Cañada
March 14, 2025
இலங்கை

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலயவில் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேலும் மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, மாத்தளை, நுவரெலியா மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது.

வடக்கு, கிழக்கு, மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை, மாத்தளை, நுவரெலியா மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் சில இடங்களில் மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

AI தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்படும் சிறுவர்களின் ஆபாச புகைப்படங்கள்

admin

கம்பஹா – கிரிந்திவிட்ட பகுதியில் இருவர் மீது துப்பாக்கிச் சூடு- விசாரணை குழு நியமிப்பு

admin

ஹசீஸ் போதைப்பொருளுடன் கைதான கனேடிய பெண்

admin

Leave a Comment