உலகின் மிகப்பெரிய YouTuber ஆன MrBeast (Jimmy Donaldson) அவரது YouTube மூலம் கிடைக்கப்பெறும் வருமானத்தினை விட சொக்லேட் விற்பனையிலிருந்து அதிக வருமானம் ஈட்டுகிறார்.
அவரது Beast Industries இற்குச் சொந்தமான Feastables சொக்லேட் கடந்த ஆண்டு 250 மில்லியன் டொலர் வருவாய் மற்றும் 20 மில்லியன் டொலர் லாபம் பெற்றுள்ளது. அதேநேரம் அவரது மீடியா பிரிவு 80 மில்லியன் டொலர் இழப்பை சந்தித்துள்ளது.
MrBeast தனது YouTube புகழ் மற்றும் வருமானத்தைப் பயன்படுத்தி Lunchly என்ற ஸ்நாக்ஸ் மற்றும் Viewstats எனும் மென்பொருள் நிறுவனத்திலும் முதலீடு செய்துள்ளார். அத்தோடு கடந்த நான்கு ஆண்டுகளில் இவரது Beast Industries 450 மில்லியன் டொலர் முதலீடு பெற்றுள்ளது.