9.1 C
Cañada
March 14, 2025
இலங்கை

ரணிலுக்கு எதிரான வெளிவரும் அதிர்ச்சிகர உண்மைகள்

சர்வதேச ஊடகம் ஒன்றில் இடம்பெற்ற நேர்காணலில் கலந்துக்கொண்ட இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் “பட்டலந்த சித்திரவதை அறை” தொடர்பாக  கேட்கப்பட்ட கேள்விகளும், அவர் அளித்த பதில்களும் சமூகத்தில் மிகுந்த கவனத்தை ஈர்த்துள்ளன.

பட்டலந்த வதை முகாம் இயக்கப்பட்ட காலத்தில், அப்போதைய காலக்கட்டத்தில் அமைச்சராக இருந்த ரணில் விக்ரமசிங்கவின் அலுவலகத்திற்குள்ளேயே பல  சித்திரவதைகள் நடத்தப்பட்டமைக்கான சான்றுகள் இருந்தமை விசாரணைகளின் ஊடாக  தெரியவந்ததாக இலங்கையின் இளம் ஊடகவியலாளர் சங்கத்தின் செயலாளர் பசீர் தெரிவித்தார்.

பட்டலந்த வதை முகாம் தொடர்பாக விசாரணை நடத்திய ஆணைக்குழுவைத் தவிர நேரடி சாட்சியம் ஒன்றும் இருந்தாகவும், பட்டலந்த வதை முகாம், விசாரணை குழுவின் அறிக்கை, நேரடி சாட்சியம், ரணில் தரப்பின் அட்டூழியம் என்றும் பல அதிர்ச்சித் தகவல்களை அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் இலங்கை பொலிஸார் மற்றும் இராணுவத்தினரை இணைத்ததாக இந்த பட்டலந்த வதை முகாம் செயற்பட்டு வந்துள்ளது.  

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக ரணில் விக்ரமசவின் கருத்துக்களால் தூசுத்தப்பட்டுள்ள பட்டலந்த விவகாரம் ஈழத்தமிழர் வரலாற்றிலிலுள்ள முக்கிய விடயங்களையும் அம்பலப்படுத்தியுள்ளன.

Related posts

பதவியில் இருந்து விலகப் போவதாக சபையில் அறிவித்த அர்ச்சுனா எம்.பி

admin

திருகோணமலையில் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்ட சகோதரிகள்

admin

யாழ் வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று இளைஞர்கள் கைது

admin

Leave a Comment