இராணுவ முகாம்களில் இருந்து தப்பிச் சென்ற 20 இராணுவ வீரர்கள் கண்டி பொலிஸாரால் கண்டி, கட்டுகஸ்தோட்டை மற்றும் அலவத்துகொடை பகுதிகளில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இராணுவ வீரர்கள் கண்டி பகுதியில் பல்வேறு தனியார் தொழில்களில் பணியாற்றி வந்தனர். பாதுகாப்புப் படைகளில் இருந்து தப்பியோடிய அனைத்து முன்னாள் இராணுவ வீரர்களையும் உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்ற பாதுகாப்புச் செயலாளரின் உத்தரவை அமல்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாகவே இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இவ்வாறு தப்பிச் சென்ற முன்னாள் இராணுவ வீரர்கள் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. சமூகத்தில் சட்டமுறை ஒழுங்கை பாதுகாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும், பாதுகாப்பு அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்பை அதிகரித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.