ஐ.சி.சி. சார்பில் ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர், வீராங்கனை விருது வழங்கப்படுகிறது. பிப்ரவரி மாதத்திற்கான பரிந்துரைப்பட்ட பட்டியலில் இந்தியாவின் சுப்மன் கில், ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித், நியூசிலாந்தின் கிளென் பிலிப்ஸ் ஆகியோர் இடம்பெற்றனர்.
இந்த பட்டியலில் இருந்து இந்தியாவின் சுப்மன் கில் சிறந்த வீரர் விருதை வென்றார். இது அவருக்கான மூன்றாவது விருதாகும். சாம்பியன்ஸ் டிராபி தொடரில் வங்கதேசத்துக்கு எதிராக 101 ரன்கள் மற்றும் பாகிஸ்தானுக்கு எதிராக 46 ரன்கள் விளாசிய அவர், இந்தியாவை பைனலுக்கு அழைத்துச் செல்ல முக்கிய பங்கு வகித்தார்.
மேலும், கடந்த 2023ஆம் ஆண்டு ஜனவரி மற்றும் செப்டம்பர் மாதங்களில் சுப்மன் கில் இந்த விருதை வென்றுள்ளார். அதேபோல், சிறந்த வீராங்கனை விருதை ஆஸ்திரேலியாவின் அலானா கிங் பெற்றுள்ளார்.