காலி – அக்மீமன பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் முன்னாள் சிறைச்சாலை அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவம் அவரது வீட்டில் நடந்ததாகவும், அவர் பூஸ்ஸ சிறைச்சாலையின் கண்காணிப்பாளராகப் பணியாற்றிய சிரிதத் தம்மிக்க என்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டை அடையாளம் தெரியாத நபர் மேற்கொண்டதாக கூறப்படுகிறது. துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் மற்றும் சம்பவத்திற்குப் பின்னணி தொடர்பில் எந்தவொரு தகவலும் இதுவரை வெளிவரவில்லை.
துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் தொடந்து மேற்கொண்டு வருகின்றனர். குற்றவாளியை பிடிக்க தேடுதல் நடவடிக்கைகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.