அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில், வானிலை ஆய்வு மற்றும் பருவக்கால மாறுபாடு இலாகாவின் தலைவராக கேத்ரின் கால்வின் பணியாற்றி வந்தார்.
அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவி ஏற்ற பிறகு, அரசு அலுவலகங்களில் பணிபுரியும் பலரை பணிநீக்கம் செய்து வந்தார். இதன் தொடர்ச்சியாக, அவர் நாசாவில் பணியாற்றி வந்த கேத்ரின் கால்வினையும் பணிநீக்கம் செய்துள்ளார். அத்தோடு மொத்தம் 23 பேரை நாசாவில் இருந்து நீக்கியுள்ளார்.
வானிலை மாற்ற ஆய்வு துறை தேவையற்றது என்று டிரம்ப் முன்பே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.