அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியர் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை எதிர்த்து நடத்தப்பட்ட பணிப்புறக்கணிப்பு போராட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
அதிகாரிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர், போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர தீர்மானிக்கப்பட்டதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
இந்த போராட்டம் நாடளாவிய அளவில் அனைத்து வைத்தியசாலைகளிலும் நடைபெற்ற நிலையில், இன்று (13) காலை 8.00 மணிக்கு நிறைவடைந்தது.