6.3 C
Cañada
March 14, 2025
இலங்கை

பெண் மருத்துவரை பாலியல் சீண்டலுக்கு உட்படுத்திய சந்தேகநபர் வாக்குமூலம்

அனுராதபுரம் மருத்துவமனையின் பெண் மருத்துவர் பாலியல் சீண்டல் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 34 வயது சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் கல்னேவ, ஹெலபதுகம பகுதியில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, பின்னர் அனுராதபுரம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

விசாரணையின் போது, சந்தேக நபர் சிறையில் இருந்து பிணையில் வெளியே வந்ததாகவும், பணம் இல்லாததால் பொருட்கள் திருடுவதற்காக மருத்துவர் தங்கியிருந்த விடுதிக்கு சென்றதாகவும் வாக்குமூலம் வழங்கியுள்ளார். விடுதியில் பெண் மருத்துவர் மட்டுமே தனியாக இருந்ததை அறிந்து தகாத செயல் செய்துள்ளதாக அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

அவரை போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். ஐஸ் போதைப்பொருள் பயன்படுத்துபவர் என்பதும், பல வீடுகளுக்குள் புகுந்து திருடியிருப்பதும் தெரியவந்துள்ளது. மேலும், நாட்டின் பிரபல குற்றவாளிகளின் பட்டியலில் இவரது பெயர் இருப்பது உறுதியாகியுள்ளது. இதனையடுத்து, நீதிமன்ற உத்தரவின்படி சந்தேக நபர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்.

Related posts

தங்க நகைகளுடன் இந்தியாவுக்கு தப்பியோடியுள்ள செவ்வந்தி

admin

தமிழரசுக் கட்சி அடுத்த தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக அறிவிப்பு

admin

யாழ் வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று இளைஞர்கள் கைது

admin

Leave a Comment