5.7 C
Cañada
March 15, 2025
விளையாட்டு

ஐபிஎல் விளம்பரத்தால் ஜியோஸ்டார் 6000 கோடி ரூபாய் இலக்கு

ஐபிஎல் விளம்பர வருவாய் மூலம்  ஜியோஸ்டார் சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மார்ச் 22-ம் திகதி தொடங்கி மே 25-ம் திகதி வரை நடைபெற உள்ள ஐபிஎல் டி-20 போட்டிகள் ஜியோஸ்டார் மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாக உள்ளது.

இந்தியாவில் கிரிக்கெட் ரசிகர்களின் ஆர்வம் விளம்பர வருவாயிலும் எதிரொலிப்பது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில், ரிலையன்ஸ் ஜியோஸ்டார் நிறுவனம் தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் தளங்கள் மூலம் சுமார் 6,000 கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் இருந்து 3,900 கோடி ரூபாய் வருவாய் கிடைத்த நிலையில், இந்த ஆண்டு டிஜிட்டல் தளங்களில் இருந்து 55 சதவீதமும், தொலைக்காட்சியில் இருந்து 45 சதவீதமும் வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இவ் ஆண்டு 58 சதவீதம் வளர்ச்சி காணும் என வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

Related posts

இங்கிலாந்து வீரர் ப்ரூக் 2 ஆண்டுகளிற்கு ஐபிஎல் விளையாட தடை

admin

12 ஆண்டுகளிற்கு பின் சாம்பியன்ஸ் டிராபியை வென்ற இந்திய அணி

admin

ஐ.சி.சி. சிறந்த வீரர் விருதை வென்ற இந்திய வீரர் சுப்மன் கில்

admin

Leave a Comment