தென்கொரியாவின் ஏர் பூசன் விமான நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் சமீபத்தில் தீப்பிடித்தது. இதில் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை. எனினும் அந்த விமானம் பயன்படுத்தாத முடியாத அளவுக்கு சேதமடைந்தது.
இதனையடுத்து ஏர் பூசன் நிறுவனமானது செல்போன் சார்ஜ் செய்ய பயன்படுத்தப்படும் பவர் பேங்குகளை விமானத்தில் கொண்டு செல்ல தடை விதித்தது.
அந்தவரிசையில் தற்போது சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனமும் இணைந்துள்ளது. அதன்படி 100 வாட் திறன் வரை கொண்ட பவர் பேங்குகளை விமானத்தில் கொண்டு செல்லலாம். ஆனால் தங்களுடன் கொண்டு செல்லும் கைப்பையில் அதனை கொண்டு செல்லக்கூடாது என சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.