7.4 C
Cañada
March 14, 2025
உலகம்

அமெரிக்க பணயக் கைதியை விடுவிப்பதற்கான ட்ரம்பின் கோரிக்கைக்கு ஹமாஸ் ஒப்புதல்

அமெரிக்க பணயக் கைதியை விடுவிக்க ஹமாஸ் அமைப்பினர் ஒப்புதல் தெரிவித்துள்ளனர். அத்துடன் இஸ்ரேலிய பணயக் கைதிகளில் உயிரிழந்த 4 பேரின் உடல்களை ஒப்படைக்கவும் ஹமாஸ் அமைப்பினர் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

ஜனவரி மாதத்தில் இருந்து பெப்ரவரி மாதம் வரை ஏழு வாரங்கள் இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அடுத்த கட்ட போர் நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தை கட்டாரில் நடைபெற்று வரும் நிலையில் ஹமாஸ் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு ட்ரம்ப் வெற்றி பெற்றதும், இஸ்ரேல்- ஹமாஸ் இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வருவேன் எனத் தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து போர் நிறுத்தத்திற்கு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

Related posts

பாகிஸ்தானில் 400 பயணிகளுடன் சென்ற ரயில் கடத்தல்

admin

நாசாவின் அதிகாரிகள் திடீர் பணிநீக்கம்- டிரம்ப் உத்தரவு

admin

பிலிப்பைன்ஸ் முன்னாள் ஜனாதிபதி கைது

admin

Leave a Comment